என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விழுப்புரம் விபத்து"
- டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை.
- குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடைபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு மனுநீதி (6), தேவவிருதன் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிவா செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோபிளாக் கற்களை எடுத்துக்கொண்டு டிராக்டரில் புறப்பட்டார். அப்பொழுது அவரது குழந்தைகள், நாங்களும் வருவோம் என அடம் பிடித்ததால் குழந்தைகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு சென்றார்.
இன்று காலை 7.30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி வார சந்தையின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.
டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை. குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குழந்தையை மீட்ட சிவா, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
அப்போது, அங்கு வந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- விபத்து குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 54), அயனாவரம் சக்திவேல் (51), திருவண்ணாமலை ஜீவா நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46) ஆகியோர் சென்னையில் இருந்து பழனிக்கு நேற்று நள்ளிரவு காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (45) ஓட்டிவந்தார்.
இந்த கார் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சக்திவேல், கமலக்கண்ணன், ராஜசேகர் ஆகியோர் படுகாயமடைந்து காருக்குள்ளேயே கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரோவில் அருகே பிள்ளையார்சாவடி பகுதியில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது.
- விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் காயம் அடைந்தனர்.
வானூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு சுமார் 20 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜராஜன் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தது. ஆரோவில் அருகே பிள்ளையார்சாவடி பகுதியில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் காயம் அடைந்தனர். பஸ்சின் முன்பகுதி பயங்கர சேதம் அடைந்தது. இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
- விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி:
புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
புதுவை மாநிலம் ஏம்பலம் பகுதி நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரத்திற்கு நேற்று மாலை சென்றார். அங்கு நடந்த உறவினர் விழாவில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வீடு திரும்பினர்.
திருக்கனூர் அருகேயுள்ள எம்.குச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து வந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் தண்டபாணி சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள், தண்டபாணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தண்டபாணி உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் செல்லஞ்சேரி, நத்தமேடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
- விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாகா மஸ்ஜித்(45). மினி லாரி டிரைவர். இவர், தனது மகன் அப்சல் ரகுமானுடன்(11) சென்னையில் இருந்து மினி லாரியில் சேலம் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற லாரி மீது மினி லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இவரது தந்தை லாரி டிரைவர் சாகாமஸ்ஜித்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தந்தை கண்முன்னே மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர்.
- விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் (வயது 23). இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மகபுல் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் சையத் முபாரக்.
புவனேஷ், முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் இ.பி அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனையடுத்து புதுவை ஜிப்மருக்கு செல்லும் வழியிலேயே முபாரக் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி சென்னையை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் பலியானர்கள்.
- நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்:
சென்னை எம்ஜிஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனும் (17) நண்பர்களாவர். கிருபாகரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் இவர்களும், இவர்களது நண்பர்கள் 4 பேரும் 3 மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த அதிக வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஹரியும் கிருபாகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரி ஓட்டிச்சென்றார்.
திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வந்த போது ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் ஹரி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்தார். இவரது பின்னால் அமர்ந்து வந்த பிளஸ்-2 மாணவன் கிருபாகரன் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்சில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் கிருபாகரன் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
- விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19) கல்லூரி மாணவர்.
இவர் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தில் தனது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது தாய் அனுசியாவுடன் சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் அனுசியா தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன் பலியானார். மாணவர் சூர்யா படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மகன் கண் எதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாகித்தியன். இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடையநல்லூரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயமடைந்த புஷ்பராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
- விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்:
விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் சாந்தகுமார் (வயது 16). அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. தொழிற்சங்க செயலாளர் தேசிங்கு. இவரது மகன் குமார் (16), பாலு மகன் என்பவரது புஷ்பராஜ் (17).
இவர்கள் 3 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து தீவனூரில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, மீண்டும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தீவனூர் கூட்டேரிப்பட்டு சாலை, பெரமண்டூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த குமார் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த புஷ்பராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் 2 பேரும் தினசரி மோட்டார் சைக்கிளில் சென்று விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.
- இன்று காலை ரவி, ராஜவேல் ஒரே மோட்டார் சைக்கிளில் விளை நிலத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கி.முத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி (வயது 47), ராஜவேல் (35). விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான விளை நிலம் ஊருக்கு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
எனவே விவசாயிகள் 2 பேரும் தினசரி மோட்டார் சைக்கிளில் சென்று விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம். அதன்படி இன்று காலை ரவி, ராஜவேல் ஒரே மோட்டார் சைக்கிளில் விளை நிலத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்றனர். அந்த வழியாக கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவி, ராஜவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுகுறித்து அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்